கோலாகலமாக நடைபெற்ற மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நடைபவனி
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாபெரும் நடைபவனி வெகு சிறப்பாக நடைபெற்றது.
மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலயத்தின்
அதிபர் கௌசல்யா கணேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 25இற்கும் மேற்பட்ட பழைய Batches சார்பான மாணவர்கள் நடைபவனியாகவும், வாகன ஊர்திகளின் ஊர்வலமாகவும்வந்தனர்.
இப்பாடசாலையின் இந்நிகழ்வானது அம்பாறை மாவட்டத்தின் இயற்கை எழில் நிறைந்த மல்வத்தை கிராமத்தின் பெருமைகளை பறைசாற்றும் வகையிலும், சமூக விழிப்புணர்வு கருத்துக்கள் உள்ளடங்கியதாகவும் அலங்கரிக்கப்பட்டு இவ் ஊர்வலம் வெகு சிறப்பாக அதிகமான மாணவர்களின் உற்சாகமான பங்குபற்றலுடன் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. தங்களுடன் கல்வி கற்ற பள்ளித் தோழமைகளை மீண்டும் சந்தித்து மகிழ்வதற்கான ஒரு வாய்ப்பாகவும் இது அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சா. நடனசபேசன்



