அமரர் சீ. மூ. இராசமாணிக்கம் 113 ஆவது ஜனனதின நிகழ்ச்சி

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் சீ.மூ.இரசமாணிக்கம் அவர்களது 113 ஆவது ஜனனதினநிகழ்வு இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்புக் கிளையின் ஏற்பாட்டில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில்  25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள சீ.மூ.இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்தில்  இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது அன்னாரது  உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அன்னாரது நினைவுப் பேருரையினை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நிகழ்த்தியதுடன் அன்னார் தொடர்பான சிறப்புரையினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கி.துரைராசசிங்கம் நிகழ்த்தினார.; இந்நிகழ்விற்கு  தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் பாராளுமன்றஉறுப்பினர்கள் பிரதேச சபைத் தவிசாளர்கள் பிரதேசசபை உறுப்பினர்கள் அடங்கலாக தமிழரசுக்கட்சித் தொண்டர்கள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சா. நடனசபேசன்