ஹற்றன் டன்கெல்ட் தேயிலைத் தோட்டத் தொழிற்சாலை, இலங்கையின் புகழ்பெற்ற தேயிலைத் தொழிலில் ஓர் ஆழமான அனுபவத்தைக் காட்டுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலண்டனைத் தளமாகக் கொண்ட உணவு சார்ந்த பயண அனுபவங்கள் குறித்த உலகளாவிய அம்சத்தின் ஒரு பகுதியான, நேஷனல் ஜியோகிராஃபிக் டிராவலர் (யுகே) அமைப்பு இலங்கையின் வளமான தேயிலை பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்தியுள்ளது.
அதில் ஹட்டனில் தேயிலை சுற்றுலா ஒரு பிரதான உதாரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் வரலாற்று சிறப்புமிக்க டன்கெல்ட் தேயிலைத் தொழிற்சாலையைச் சுற்றிப் பார்க்கலாம் என்றும் தேநீர் தயாரிக்கும் செயல்முறையைக் கவனிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
