அரசாங்கத்தினால் அரச உத்தியோகத்தர்களின் மொழித்துறையை விருத்தி செய்யும் நோக்கில் அரச மொழிகள் திணைக்களத்தினால் மொழிப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச சபைகளில் தமிழ்மொழி மூலம் கடமை புரியும் உத்தியோகத்தர்களின் சிங்கள மொழித்துறையை விருத்தி செய்யும் நோக்கில் அரச மொழிகள் திணைக்களத்தினால் (100 மணித்தியாலயம்) சிங்களப்பயிற்சியைப் பூர்த்தி செய்த ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையில் கடமையாற்றும் சுகாதார உதவியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வந்தாறுமூலை கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
அரச கரும மொழிகள் திணைக்களத்தின் சிரேஷ்ட போதனாசிரியர் எம்.எம்.செயினுதீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் எம்.முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மேலும் சிறப்பு அதிதிகளாக ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் செயலாளர் டீ.கிருபராஜா, நிர்வாக உத்தியோகத்தர் கே.பிரியதர்ஷினி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மொழி விருத்தி உத்தியோகத்தர் வீ.சந்திரகுமார் ஆகியோரும் அரச கரும மொழிகள் திணைக்களத்தின் சிரேஷ்ட மொழிப் போதனாசிரியர்களான எம்.ஐ.இம்தியாஸ், ஏ.கே.எம்.றிம்ஸான் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது பிரதேச சபையின் 52 சுகாதார உதவியாளர்கள் இப்பாடநெறியைப் பூர்த்தி செய்துள்ளதுடன், அவர்களது கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன், அதிதிகளுக்கு ஏற்பாட்டாளர்களால் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.
சா. நடனசபேசன்



