ஜப்பானிய பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை கலைப்பு

ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே தகைச்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை அந்நாட்டின் பாராளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் பதவியேற்ற அவர், நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சிக்கான தனது புதிய திட்டங்களுக்கு மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் இந்த இடைத்தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

465 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தின் கீழவைக்கு நடைபெறவுள்ள இந்தத் தேர்தல், தகைச்சியின் தலைமைத்துவத்திற்கு ஒரு முக்கிய சோதனையாகக் கருதப்படுகிறது.

பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு குறித்த கவலைகள் மக்களிடையே நிலவி வரும் சூழலில், இந்தத் தேர்தல் முடிவு ஜப்பானின் எதிர்கால பாதுகாப்பு வியூகங்களைத் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.