சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் 21 ம் ஆண்டு சுவிஸ் உதயம் விழா மற்றும் 2026 ம் ஆண்டு ஊரும் உறவும் பொங்கல் விழா நேற்று (18.01.2026) தாய்ச்சங்க உதவித் தலைவர்கே. .தியாகராஜா தலைமையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதில் தாய்ச்சங்க நிருவாக உறுப்பினர்கள் மற்றும் சுவிஸ்லாந்து வாழ் உதயம் உறவுகள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
சாத்விகா நடனாலயா மாணவர்களின் சிறப்பான வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமாகி மட்டக்களப்பு மண்ணிண் பாரம்பரிய விருந்தோம்பலுடன் தமிழர் கலை கலாச்சார நிகழ்வுகளுடனும் மற்றும் அலோசியஸ் அவர்களின் கரோக்கே இசை நிகழ்சியுடன் இந்நிகழ்வு இனிதாக நிறைவு பெற்றது.
இந்நிகழ்வில் முக்கியமாக சுவிஸ் உதயம் அதிஷ்டலாப சீட்டிளுப்பு நடைபெற்று பின்வருவோர் பெறுமதியான பரிசில்களை தட்டிச் சென்றனர்.
1ம் பரிசு –ROHINI THARMARASA – ¾ பவுண் தங்க ஆபரணங்களை பெற்றுக் கொண்டார். (இதற்கு அனுசரணை வழங்கியவர் – RAVI JEWELRY ZÜRICH)
2ம் பரிசு – DEVI PRAPAKARAN – ½ பவுண் ஆபரணங்களை பெற்றுக் கொண்டார் (இதற்கு அனுசரணை வழங்கியவர் – AK GOLD JEWELRY ZÜRICH)
3ம் பரிசு – KUMARAVEL VASANTHA AARTHIKA – ¼ பவுண் தங்க ஆபரணங்களை பெற்றுக் கொண்டார் (இதற்கு அனுசரனை வழங்கியவர் – SRI JEWELRY
சா. நடனசபேசன்


