மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பாலையடிவட்டை வட்டாரத்தில் 35ஆம் கிராமம்,கண்ணபுரம் கிழக்கு, நெல்லிக்காடு,37ஆம் கிராமம்,புதுமுன்மாரிச்சோலை,கிராமங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அம்பாறை உகனை குடி நீர் இணைப்பு மூலம் குடிநீர் இன்றி கஷ்டப்படும் மக்களுக்கான தீர்வினை பெற்றுக் கொடுக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களின் கவனத்திற்கு போரதீவுப்பற்று பிரதேசசபையின் உப தவிசாளர் த.கயசீலன் அவர்களினால் கொண்டுவரப்பட்டது.
அதற்கு அமைவாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களினால் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அம்பாறை உகனை நிலைய பொறுப்பதிகாரி சம்பத் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அதற்கு அமைவாக துரிதகதியில் குடி நீர் இணைப்பு வழங்கும் ஆரம்ப வேலைத்திட்டம் இன்று (09.01.2026)இடம்பெற்றது.
போரதீவுப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் த.கயசீலன் அவர்கள் கடந்த மாதம் அம்பாறை உகனை தேசிய நீர்வழங்கள் அலுவலகத்திற்கு சென்று நிலைய பொறுப்பதிகாரி சம்பத் அவர்களுடன் நேரில் சென்று கலந்துரையாடினார்.
போரதீவுப்பற்றில் உள்ள பின்தங்கிய எல்லைக்கிராமங்களுக்கு சுத்தமான குடிநீரினை வழங்கும் வகையில் தவிசாளர் வி.மதிமேனன்,உப தவிசாளர் த.கயசீலன் அவர்களின் விடாமுயற்சியினால் இன்று(09.01.2026)ஆம் திகதி புதிய நீர் இணைப்பிணை வழங்குவதற்கான கிராமங்களையும் அதற்கான வீதிகளை உகனை தேசிய நீர்வழங்கள் அலுவலகத்திற்கு பொறுப்பான அதிகாரிகளினால் அளவீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
சா. நடனசபேசன்

