கிழக்கில் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு

அரசாங்கத்தினால் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்பு அரசாங்கத்தினால் சகல தேவாலயங்களுக்கும் புது வருடப் பிறப்பை முன்னிட்டு இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள புளியந்தீவு மரியாள் தேவாலயம் தாண்டவன் வழி காணிக்கை மாதா தேவாலயம் குண்டு தாக்குதலுக்கு இலக்கான சீயோன் தேவாலயம் மற்றும் இதர மெதடித்த தேவாலயங்கள் என மாவட்டத்தில் உள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் போலீஸ் ராணுவ விசேட அதிரடி படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆலய நிர்வாகத்தின் கண்காணிப்பின் கீழ் வழிபாடுகளுக்கு வரும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்

மட்டக்களப்பு வரதன்