நுரைச்சோலை மின் பிறப்பாக்கிகள் இரண்டு வாரங்களில் மீள இயங்கும்

நுரைச்சோலை மின் பிறப்பாக்கிகள் இன்னும் இரண்டு வாரங்களில் மீள இயங்கும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மின் பிறப்பாக்கிகள், ஜனவரி 14 ஆம் 18 ஆம் திகதிகளில் தேசிய மின் கட்டமைப்பில் மீண்டும் இணைக்கப்படவுள்ளன.

இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்தப் பிறப்பாக்கியின் பராமரிப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

உரிய தரப் பரிசோதனைகளுக்குப் பின்னர் அது தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படும் என மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, 1 ஆம் இலக்க மின் பிறப்பாக்கியின் கொதிகலனில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, அந்தப் பிறப்பாக்கி கடந்த டிசம்பர் 20 ஆம் திகதி பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டது.

தற்போது அதன் கோளாறுகளைச் சரிசெய்யும் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அதனை 2026 ஜனவரி 18 ஆம் திகதியளவில் மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்க எதிர்பார்ப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.