விசேட தேவைக்குரியவர்களுக்கான சக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு – வந்தாறுமூலை தாயக ஊற்று அமைப்பின் ஒருங்கிணைப்பில் Australian Medical Aid Foundation அனுசரணையில் விசேட தேவையுடையவர்களுக்கான சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் வந்தாறுமூலையில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்களின் அரசியல் பணிமனையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டி, மாவடிவேம்பு, களுவன்கேணி மற்றும் கொம்மாதுறை ஆகிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட விசேட தேவையுடையவர்களுக்காக குறித்த சக்கர நாற்காலிகள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் தாயக ஊற்று அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் இ. சிறிநாத், ஏறாவூர்பற்று பிரதேச சபை தவிசாளர் மு.முரளிதரன், ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினரும் தாயக ஊற்று அமைப்பின் உபதலைவரும் த.பிரபாகரன், ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான நாகேந்திரன், வவானந்தன், தாயக ஊற்று அமைப்பின் உறுப்பினர்கள், நன்கொடையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சா. நடனசபேசன்

விசேட தேவைக்குரியவர்களுக்கான சக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு