மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் ஆராதனை

இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக இயேசு பாலகனின் பிறப்பை குறிக்கும் கிறிஸ்மஸ் பண்டிகை எளிமையான முறையில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டி வழிபாடுகளில் இன்று கிறிஸ்தவ மக்கள் ஈடுபட்டனர்

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல கிறிஸ்தவ தேவ ஆலயங்களில் விசேட நத்தார் வழிபாடுகள் இடம் பெற்றன

மட்டக்களப்பு சீயோன் தேவாலய பிரதான கிறிஸ்மஸ் ஆராதனை இன்று காலை தேவாலய பிரதான போதகர் ரோஷன் மகேசன் தலைமையில் இடம்பெற உள்ளது

இயேசுவின் பிறப்பு அவர் இவ்வுலகுக்கு கொண்டு வந்த செய்தி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக விசேட பிரார்த்தனைகளும் இங்கு இடம்பெற்றது.

மட்டக்களப்பு வரதன்