கட்முநாயக்காவிலிருந்து துருக்கி புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் விமான நிலையத்தில் (BIA) பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
202 பயணிகளுடன் துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட விமானத்தில், பயணத்தின் போது திடீரெனத் தொழில் நுட்பக் கோளாறு அவதானிக்கப்பட்டது.
இதனையடுத்து, விமானம் உடனடியாகத் திருப்பப்பட்டு, வானில் சில மணித்தியாலங்கள் வட்டமடித்த நிலையில், அவசரகால ஏற்பாடுகளுக்கு மத்தியில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
