தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னை பயணம்

தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் இன்று (16) சென்னைக்கு சென்று அங்கு முக்கிய சந்திப்புகளில் ஈடுபடவுள்ளனர். இந்த தகவலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி , பொ ஐங்கரநேசன் (தலைவர் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் ) செகஜேந்திரன் (செயலாளர் ததேமமு), த.சுரேஸ் ( தேசிய அமைப்பாளர் ) க.சுகாஷ் (சிரேஸ்ட சட்டத்தரணி) உத்தியோகபூர்வ பேச்சாளர் , ந.காண்டீபன் (சிரேஸ்ட சட்டத்தரணி) பிரசாரச் செயலாளர்

ஆகியோர் இவ்வாறு செல்லவுள்ளனர். இது தொடர்பில் கஜேந்திரகுமார் எம்.பி கூறியுள்ளதாவது,

சமஷ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகம் கொடுக்க வளண்டும். அந்தவகையில் பிராந்திய வல்லரசாகிய இந்திய அரசு இலங்கை மீது அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறான நிலையை ஏற்படுத்த தமிழக அரசியல் தலைவர்கள் குரல்கொடுக்க வேண்டிய அவசரதேவை எழுந்துள்ளது. 

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக ஸ்ரீலங்கா அரசு ஐக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.