அவுஸ்திரேலியா மகளிர் இல்லத்தின் நிதி உதவியுடன் மட்டக்களப்பில் நிவாரணப் பணி மேற்கொள்ளப்ப்டடது.
சமுக நலன்புரி அமைப்பினால்(SWO)நிறுவனத்தினால், அவுஸ்திரேலியா மகளிர் இல்லத்தின் நிதி உதவியுடன், அண்மையில் ஏற்பட்ட கடும் காற்று மழையால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள ஆயித்தியமலை வடக்கு மற்றும் தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் 100 பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
கடந்த சனிக்கிழமை(13) பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
நிவாரணபணியில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் சத்யானந்தி நமசிவாயம்,அரச உத்தியோகத்தர்கள், ற்றும் சமுகநலன்புரி(Swo) நிறுவன உத்தியோகத்தர்கள் பங்கேற்று, ஆயித்தியமலை தெற்கு கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
சா. நடனசபேசன்


