வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம்,திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வட மாகாணத்தின் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்திலும் மாத்தளை, குருநாகல், அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னிறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அத்துடன் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
சப்பிரகமுவை, மத்திய, தென் மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
