வாகரை கடலில் கரையொதுங்கிய சடலத்தை அடையாளம் காணுமாறு பொதுமக்களிடம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போன ஆண் ஒருவரின் சடலம் கரையோதுங்கியுள்ளதாக வாழச் சேனை போலீசார் தெரிவித்துள்ளனர்
கரையொதுங்கிய சடலம் பற்றி கிடைக்கப்பெற்ற விவரங்கள்
கண்டெடுக்கப்பட்ட இடம் வாகரை பொலிஸ் பகுதி கஜுவத்த கடற்படை முகாம் பின் கடற்கரை அண்டிய பகுதி
கண்டெடுக்கப்பட்ட திகதி-05/12/2025
இவரது சடலம் தற்போது வாழச் சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
வாகரை பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் வாழும் மக்கள் அல்லது வெலிக்கந்தை புணானை கிரான் அல்லது மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த ப்பகுதியிலாவது பிற மாவட்டங்களில் உள்ளவர்கள் யாராவது காணாமல் போனால் தயவு செய்து இந்தச் செய்தியை தெரியப்படுத்தி சடலத்தை அடையாளம் காண உதவுமாறு திடீர்மரணவிசாரணையாளர் சபாபதிபிள்ளை இராசகுமார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்
குறிப்பிட்ட 21 நாட்களுக்குள் சடலம் அடையாளம் காணப்படாமல் விட்டால் அரசாங்கச் செலவில் அடக்கம் செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
மட்டக்களப்பு வரதன்
