தமிழ்நாடு முதல்வருக்கு அமைச்சர் விஜித்த நன்றி தெரிவிப்பு

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரகால நிவாரண உதவிகளை வழங்கியமைக்காக, தமிழ் நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் விஜித ஹேரத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். 

தமிழக முதல்வருடன் தொலைபேசி யில் உரையாடி அவர் நன்றி தெரிவித்துள்ளார். 

இலங்கை கடினமான சூழலை எதிர்கொண்ட சந்தர்ப்பங்களில் தமிழக அரசு வழங்கிய ஆதரவுக்கும் வெளிப்படுத்திய தோழமை உணர்விற்கும் அமைச்சர் விஜித ஹேரத் நன்றி தெரிவித்தார். 

அத்துடன், இரு தரப்பிற்கும் இடையிலான மக்கள் ரீதியான தொடர்புகள் எதிர்காலத்தில் மேலும் வலுவடையும் என்றும், நல்லெண்ணமும் ஒத்துழைப்பு தொடர்ந்தும் வளரும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.