சத்துருக்கொண்டான் மக்களுக்கு நிவாரணம் வழங்கிவைப்பு

கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உரிய நிவாரண நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதே வேலை மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பொது மக்களுக்கான நிவாரணம் வழங்கும் நிகழ்வு சர்வோதயத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 96 குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்டு நிவாரணங்களை வழங்கி வைத்தார்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட 68 குடும்பங்களுக்கு அவர்களது வீடுகளை புணரமைப்பு செய்வதற்கும் ஒரு குடும்பத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் 3000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு வரதன்