தித்வா புயலின் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்ட பேரழிவில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கில் கிழக்குமாகாணக் கல்வித்திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய நிவாரணணப் பொருள்கள் சேகரிக்கப்படுகின்றன.
சம்மாந்துறை கல்விவலயத்தின் ஏற்பாட்டில் வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் வழிகாட்டலில் பாடசாலைகளில் சேகரிக்கப்பட்ட பொருள்கள் ; அதிபர்களால் 8 ஆம் திகதி திங்கட்கிழமை வலயக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனஃ
அங்கு அனர்த்த நிவாரணப்பொருள்களுக்கு இணைப்பாளராக நியமிக்கப்பட்ட பிரதிக்கல்விப்பணிப்பாளர் எச்.நைறோஸ்கான் அவர்களிடம் பொருள்கள் கையளிக்கப்பட்டன
அப்போது பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான பி.எம்.வை அறபாத்; பி.பரமதயாளன் திருமதி ஏ.சி.என் நிலோபரா ஏ.எம்.எம். ,சியாத் வேப்பையடி கலைமகள் வித்தியாலய அதிபர் கே.தியாகராஜா உட்பட வலக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்துசிறப்பித்தனர்
சா.நடனசபேசன் மட்டக்களப்பு

