அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பெரியநீலாவணை தொடர் மாடியில் சிகரம் கல்வி நிலையத்தில் கல்விகற்கும் மாணவர்களது பெற்றோர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு சிகரம் கல்விக்கூடத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை சிகரம் கல்விக் கூடத்தில் அதன் தலைவர் எஸ்.கழுகாசலம் தலைமையில் இடம்பெற்றது.
இதற்கான அனுசரணையினை அமரர் செந்தூரி சந்திரகுமார் அவர்களது பிறந்த நாளினை முன்னிட்டு லண்டனில் வசிக்கும் அவரது தந்தை சீனித்தம்பி சந்திரகுமார் அவர்களின் குடும்பத்தினரால் வழங்கப்பட்டது.
சிகரம் கல்வி நிலையம் 2018 ஆம்ஆண்டு நிறுவப்பட்டு அப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக தரம் 1 தொடக்கம் உயர்தரம் வரை கல்வி புகட்டப்பட்டுவருவதுடன் இவ்வாறான வாழ்வாதார உதவிகளும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன
இந்நிகழ்வில் கிராமசேவகர் கார்த்திக் உபதலைவர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் அதிபர் வே.தங்கவேல் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்
சா.நடனசபேசன் மட்டக்களப்பு




…………….
