துறைநீலாவணைக் கிராமத்தில் இறந்த உறவுகளுக்கு வரலாற்றில் முதல் தடவையாக தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்ப்ட்டது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்கு உட்பட்ட துறைநீலாவணைக் கிராமத்தில் இறந்த உறவுகளுக்கு வரலாற்றில் முதல் தடவையாக தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை துறைநீலாவணை பொதுமையானத்தில் தமிழரசுக்கட்சியின் பிரதேசசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் இளமாறன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு தங்களது உறவுகள் புதைக்கப்பட்ட இடங்களில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இந்நிகழ்வுக்கு மண்முனை தென்எருவில் பற்று பிரதேசசபை பிரதித் தவிசாளர் அ.வசிகரன் பிரதேசசபை உறுப்பினர் அ.பத்மதேவு மற்றும் துறைநீலாவணை வட்டாரக்கிளையின் அங்கத்தவர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்
சா.நடனசபேசன் மட்டக்களப்பு
