கண்டி – கொழும்பு பிரதான வீதி மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கீழ் கடுகண்ணாவை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு, நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை பாதிப்புகள் காரணமாக இந்த வீதி மூடப்பட்டிருந்தது.
வீதி நேற்று (3) மாலை முதல் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் மாத்திரம் அந்த வீதியூடாக பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
