மாவிலாறு அணை உடைப்பெடுப்பு : ஜனாதிபதி கண்காணிப்பில் மீட்புப் பணி

மாவிலாறு அணைக்கட்டு உடைந்தமையினால் சிக்கித் தவித்த மக்களை மீட்கும் நடவடிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயற்படுத்தப்படுகின்றது. 

இதுவரையில் விமான நடவடிக்கைகள் மூலம் 121 பேரின் உயிர்களைக் காப்பாற்ற முடிந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 

தங்கவேலி என்ற கிராமத்தில் உள்ள சுமார் 1,000 பேரை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதியுடன் தொலைபேசியில் பேசிய ஒரு பிக்கு தெரிவித்தார். 

மூதூர் மற்றும் நீலபொல பிரதேசங்களில் உள்ள மக்களை நேற்று இரவே வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரியவந்துள்ளது.