இலங்கையில் தி ஒப்பரேஷன் சாகர் பந்து என்ற மீட்பு நடவடிக்கையை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது.
அதற்கமைய, ஏறகனவே இந்திய கடற்படையின் இரண்டு ஹெலிகொப்டர்களுக்கு மேலதீகமாக விமானப் படை ஹெலிகொப்டர்கள் இரண்டும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இவற்றுடன் நன்கு பயிறப்பப்பட்ட தேசிய அனர்த்த மீட்புப் படையைச் சேர்ந்த 80 பேரும் வருகை தந்துள்ளனர். அவர்கள் அதிகம் பாதிக்கப்பட்ட புத்தளம், பதுளை ஆகிய மாவட்டங்களில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியா ஏற்கனவே 6.2 மெட்ரிக் தொன் உணவுப் பொருள்களை அனுபபியது. அவற்றுக்கு மேலதிகமாக நேற்று மாலை மேலும் 21 மெட்ரிக் தொன் உணலுப் பொருள்களும் அவசர மனிதாபிமான உதவிப் பொருள்களும் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளன.
தற்காலிகக் கூடாரங்கள் முதலானவையும் கொண்டுவரப்பட்டு இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
