dittwa

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவான ‘தித்வாவ புயல் அடுத்த 48 மணித்தியாலங்களில் தமிழ்நாட்டின் ஊடாக இந்தியாவிற்குள் ஊடுருவும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக தமிழ்நாடு துறைமுகங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.

பலத்த புயலாக மாறியுள்ள ”டிட்வா’ தற்போது இந்தியாவின் புதுச்சேரி , தெற்கு ஆந்திரப் பிரதேசத்தின் கொரமண்டல் கடற்கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (27) மாலை நிலவரப்படி ”தித்வா புயல் மட்டக்களப்பில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் நகர்ந்து கொண்டிருந்தது.

சமீபத்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக அதிக மழைவீழ்ச்சி அடுத்த சில மணிநேரங்களில் எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.