சர்வதேச நீரழிவு தினத்தையொட்டி மட்டடக்களப்புவில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தில் சுகாதார அமைச்சினால் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் தொற்றா நோய்கள் பற்றிய விழிப்புணர்வு செயல் திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது
இதன் ஒரு கட்டமாக அண்மைக் காலத்தில் அதிகரித்து வரும் நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் முகமாக மாவட்ட சுகாதார சேவை பிராந்திய அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு பேரணி மட்டக்களப்புவில் இடம்பெற்றது
மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்களத்தில் இருந்து ஆரம்பமான இந்த விழிப்புணர்வு பேரணி நகரின் பிரதான வீதிகள் ஊடாக சென்று மட்டக்களப்பு காந்தி பூங்காவை அடைந்தது. அப்போது இந்நோயின் தாக்கம் இதனை கட்டுப்படுத்துவது சம்பந்தமான துண்டுப் பிரசாரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
பிராந்திய சுகாதார சேவை திணைக்கள பணிப்பாளர் ஆர் முரளீஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள் பிராந்திய சுகாதார சேவை திணைக்களத்தின் வைத்தியர்கள் பொது சுகாதார பரிசோதகர்கள் தாதியர் பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
மட்டு வரதன்



