கண்டி – கொழும்பு பிரதான வீதியில், கீழ்கடுகண்◌ணாவை பகுதியில் இன்று (22) காலை ஒரு விற்பனை நிலையம் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.
இந்த அனர்த்தத்தில், அந்த விற்பனை நிலையத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். நால்வர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சிலர் இந்த இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை மீட்கும் நடவடிக்கையை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தற்போது ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.
மண்சரிவையடுத்து கொழும்பு – கண்டி வீதி கடுகண்ணாவ பகுதியில் மூடப்பட்டுள்ளது
