தொழில் பெற்றுத் தருவதாக யுவதியிடம் பண மோசடி

பிரபல அரச வங்கி ஒன்றில் நாளாந்த வேதணத்திற்குப் பணிபுரிந்த யுவதி ஒருவரிடம் தனியார் வங்கியில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி.செய்யப்பட்டுள்ளது.

இச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் புரவுன்லோ தோட்டத்தில் உள்ள யுவதி ஒருவருக்கு இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் குறித்து நேற்று மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளார் பாதிக்கப்பட்ட யுவதி.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் தான் பணிபுரிந்த அரச வங்கியில் உள்ள நிலையான தொலைபேசிக்கு வந்த அழைப்பை தொடர்ந்து ரூபாய் 50,000/= பணத்தை ஈசி கேஸ் (Easy cash) மூலம் வைப்பிட்ட பின்னர் தன்னை ஹட்டன் சிங்கர் நிறுவனத்திற்க்கு வருமாறும் அங்கு லெப் டொப் Laptop ஒன்று வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்து உள்ளார்.

சம்பந்தப்பட்ட யுவதி ஹட்டன் சிங்கர் நிறுவனத்திற்க்கு சென்று பார்த்த போது அவ்வாறு யாரும் இல்லாத காரணத்தால் திரும்பி வந்து சம்பந்தப்பட்ட நபரிடம் கதைத்த போது தான் தான் ஏமாற்ற பட்டு உள்ளமை தெரிய வந்துள்ளது.

புகார் பதிவு செய்யப்பட்ட வேளையிலும் சம்பந்தப்பட்ட ஏமாற்று காரரின் கையடக்க தொலைபேசி இயங்கி வந்தமை குறிப்பிட தக்கது.

மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்