தொழிலாளர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தோரின் கொடும்பாவி எரிப்பு

பெருந் தோட்ட தொழிலாளர்களின் வேதனத்திற்கு எதிராக பாராளமன்றத்தில் குரல் கொடுத்த அரசியல் வாதிகளை கொடும் பாவி எரித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இச் சம்பவம் இன்று மதியம் மஸ்கெலியா பேருந்து நிலைய பகுதியில் இடம் பெற்றது.

சுமார் 3.30 மணிக்கு பெருந்தோட்ட தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வர்கள் மஸ்கெலியா நகரில் பதாதைகள் ஏந்திய வண்ணம் பிரதான வீதியூடாக பேருந்து நிலையம் வரை கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.

அங்கு கருத்து தெரிவித்த தொழிலாளர்கள் இலங்கைக்கு கடந்த 202 வருடங்களாக அந்நிய செலாவணி பெற்றுத் தரும் பெருந் தோட்ட தொழிலாளர்களுக்கு எவ்வித போராட்டம் இல்லாமல் தோட்ட நிர்வாகம் 200/= வும் அரசாங்கம் 200/= எதிர் வரும் ஜனவரி மாதம் முதல் வழங்க நாட்டின் தலைவர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன் வந்துள்ளார். இதனைப் பாதீடு மூலம் அறிவித்தது உள்ளார்.

இவ்வாறு வேதனம் எப்படி வழங்க முடியும் என எதிரணியில் உள்ள அரசியல் வாதிகள் வாதிட்டு உள்ளனர்.

அவ்வாறன அரசியல் வாதிகள் சற்று சிந்தித்துப் பாருங்கள் நாளாந்தம் குளவி கொட்டுக்கு இலக்காகுதல் அட்டை கடிக்கு இலக்காகுதல் மற்றும் வனவிலங்கு பாம்பு கடிக்கு இலக்காகுதல் இவ்வாறு பல இச்சைக்கு உள்ளாகுவது பெருந்தோட்ட தொழிலாளர்களே. சிலோன் தேயிலை தூள் என்றால் உலகத்தில் தனிச்சிறப்பு அதை பெற்று கொடுப்பது தோட்ட தொழிலாளர்கள்.

இனி வரும் காலங்களில் தோட்டத் தொழிலாளர்களை ஏனைய சமூகங்களும் சமமாக மதிக்க வேண்டும். எந்த ஒரு அரசியல் வாதியும் பெருந் தோட்ட மக்களுக்கு வழங்கப்படும் உரிமைகளுக்கு எதிராக கதைக்க கூடாது என தெரிவித்தனர்.

மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்