இலங்கையின் பிரபல தொழிலதிபரும் சமூக சேவையாளரும், இலங்கை ரெட்டியார் சங்கத்தின் போசகரும் கொழும்பு செட்டியார் தெரு ரவி ஜுவல்லரியின் உரிமையாளருமான என்.ஆர். அரங்கராஜன் ரெட்டியார் 13 ஆம் திகதி மாலை காலமானார்.
சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் தனது 94 ஆவது வயதில் அவர் காலமானார்.
சிறந்த சமூக சேவையாளரான அவர். கல்விக்காக குறிப்பாக மலையகத் தோட்ட மாணவர்களின் கல்விக்குப் பெரும் பங்காற்றியுள்ளார்.
பல பாடசாலைகளுக்கு கணினி உள்ளிட்ட பல பொருள்களை பெற்றுக்கொடுத்த பெரியார் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ். ஆர். ரவீந்திரன்
