லொறியுடன் பஸ் மோதி விபத்து

புத்தல – மொனராகலை பிரதான வீதியில், 11 ஆம் மைல்கல் பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்து இன்று ( 10) மதியம் இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் லொறியின் சாரதியும் உதவியாளரும் காயமடைந்த நிலையில், புத்தல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

பின்னர் அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

பேருந்தில் பயணித்த சில பயணிகளுக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்து தொடர்பில் புத்தல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.