அனுராதபுரம், தலாவ பகுதியில் இடம்பெற்ற பஸ் து விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்து 47 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பேருந்தில் 47 இற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததாகவும், காயமடைந்தவர்கள் தம்புத்தேகம மற்றும் அநுராதபுரம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களுள் ஒன்பது மாணவர்களும் அடங்குவர்.
தலாவ பகுதியில் இருந்து 411 கிராமத்திற்கு பயணித்த தனியார் பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. எதிரே வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடும்போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம், தலாவ, ஜெயகங்கா சந்தி பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
