தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளம் 1750 ரூபாயாக அதிகரிப்பு

வரவு செலவுத் திட்டத்தில் முனதோட்டத்தொழிலாளர்களின் நாட் சம்பளமாக 1750 ரூபாய்! முன்மொழியப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தில் அடுத்த 2026 ஜனவரி முதல் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை 1750 ரூபாயாக அதிகரிக்க முன்மொழிந்துள்ளார்.

தற்போதைய 1350 ரூபாய் நாட்சம்பளம் 1550 ஆக அதிகரிக்கும். வருகைக் கொடுப்பனவாக நாளாந்தம் 200 ரூபாயை அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும் என்று ஜனாதிபதி தனது வரவு செலவுத் திட்ட உரையில் குறிப்பிட்டார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடுத்த ஜனவரியில் 1750 ரூபாய் நாட்சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி அண்மையில் பண்டாரவளையில் நடந்த கூட்டத்தில் உறுதுியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.