சிவனடி பாத மலைக்கு செல்லும் பிரதான சாலையில் பாரிய அளவில் குளவி கூடுகள்.

சிவனடிபாத மலைக்குச் செல்லும் பிரதான பாதையில் பாரிய அளவில் குளவிக் கூடுகள் காணப்படுகின்றன.

ஹட்டன் சிவனடி பாத மலைக்கு செல்லும் பிரதான சாலையில் நல்லதண்ணி நகருக்கு அருகில் உள்ள நாகதீப விகாரையை அண்டிய பகுதியில் உள்ள சுமார் 40 அடி உயரம் கொண்ட புத்தர் சிலை மற்றும் அந்த சிலைக்க்காக கட்டப்பட்ட மண்டபத்தின் மேல் பகுதியில் பாரிய 8 குள்வி கூடுகள் உள்ளன..

ஒரு சில நேரங்களில் புத்தரின் முகப் பகுதியில் மற்றும் கைகள் உள்ள பகுதிகளில் குளவி கூடு கட்டி வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வழி உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் பாடசாலை மாணவர்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் பார தூக்கிகள் வர்த்தகர்கள் நோயாளிகள் முதியோர்கள் நகரில் உள்ள விருந்தினர் விடுதி உரிமையாளர்கள் நடமாடும் பிரதான சாலையாகும்.

இந்த குளவி கூடுகளை எதிர் வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி பௌர்ணமி தினத்திற்கு முன் அகற்ற சம்பந்தப்பட்ட நல்லதண்ணி வன ஜீவராசிகள் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.

இல்லை என்றால் குரங்கு, காக்கை,கழுகு, கடும் காற்று, கடும்த் வெப்பம் நிலவும் வேளையில் குளவிக் கூடு கலைந்து அங்கு நடமாடும் மக்களை தாக்கும் அபாயம் உள்ளது.

மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்