எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்தார்.
அப்போது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
இந்நாட்களில் இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்திற்கு மத்தியில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை புது டில்லியில் சந்தித்தார்.
இந்திய-இலங்கை கூட்டாண்மை, பிராந்திய ஸ்திரத்தன்மை, தொடர்புகள் மற்றும் பரஸ்பர முன்னேற்றம் தொடர்பில் இரு தரப்பினரின் அர்ப்பணிப்புகள் குறித்து பல கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்தியாவின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராக, அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் அவர்கள், இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டுமொரு முறை, மீண்டெழுந்து நிற்பதற்குத் தேவையான பயன்பெறும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை இந்தியா பெற்றுத் தந்தமைக்கு தலையீடு செய்தமைக்காக எதிர்க்கட்சித் தலைவர் நன்றி தெரிவித்தார்.
