பொதுச் சுகாதார அதிகாரிகள் சுற்றி வளைப்பு நடத்தி பெருந் தொகையான பெரிய வெங்காயத்தை அழித்தனர்.
இச் சம்பவம் நோர்வூட் பிரதேச சபை பிரிவில் உள்ள நோர்வூட் நகரில் இடம் பெற்றது.
இது குறித்து மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி ஒருவர் கூறுகையில் ஹட்டன் பிரதேச புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வழங்கிய தகவலின் படி மஸ்கெலியா பொகவந்தலாவ நல்லதண்ணி நோர்வூட் சாமிமலை பொது சுகாதார அதிகாரிகள் நோர்வூட் நகரில் உள்ள மொத்த விற்பனை நிலையம் ஒன்றை பரிசோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு பாவனைக்கு உதவாத 20 கிலோ கிழங்கு பாவனைக்கு உதவாத 396 கிலோ வெங்காயம் பாவனைக்கு உதவாத வெள்ளைப் பூண்டு 08 கிலோ கைப்பற்ற பட்டு அழிக்க பட்டன.
வர்த்தக நிலைய உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து எதிர் வரும் 12 ஆம் திகதி ஹட்டன் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் ஆகும் படி பணித்துள்ளார்கள்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
