அடையாள அட்டை ஒரு நாள் சேவை விஸ்தரிப்பு

ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமையகத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த அடையாள அட்டை ஒரு நாள் சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

வடமேல் மாகாணத்தில் அடையாள அட்டை ஒரு நாள் சேவை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் சேவை மூலம் தேசிய அடையாள அட்டைகளைப் பெறுதல் மற்றும் அது தொடர்பான ஏனைய சேவைகளை வடமேல் மாகாண மக்கள் மிகவும் இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது

மாகாண அலுவலக முகவரி,

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் வடமேல் மாகாண அலுவலகம், 3 ஆம் மாடி, புதிய வர்த்தக வளாகம், குருநாகல்.

தொலைபேசி இலக்கம் : 037 2224337

தொலை நகல் இலக்கம் : 037 2224337