தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற விமானப்படை வீரர்கள் இன்று (03) கௌரவிக்கப்பட்டனர்.
நான்காவது தெற்காசிய சிரேஷ்ட தடகள சம்பியன்ஷிப் போட்டிகள் 2025 ஒக்டோபர் 24 முதல் இந்தியாவின் ரஞ்சியில் நடைபெற்றன.
அதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய நிலையில் பதக்கங்களை வென்ற விமானப்படையின் வீர வீராங்கனைகள் இன்று (3) காலை விமானப்படை தலைமையகத்தில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவை சந்தித்தனர்.
திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்ற விமானப்படை வீர வீராங்கனைகளுக்கு விமானப்படை தளபதியினால் பதவி உயர்வும் பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன..
இலங்கை விமானப்படைக்கு மட்டுமல்லாமல் தமது தாய் நாட்டுக்கு பெருமை சேர்த்தமைக்காக விமானப்படை தளபதி தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்தப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 59 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்,
அவர்களில் விமானப்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 9 விளையாட்டு வீரர்கள் இந்த குழுவில் பங்கேற்றிருந்தனர்.
விமானப்படை விளையாட்டு வீரர்கள் 2 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் உட்பட 6 பதக்கங்களை வென்றனர்.
பதக்கங்கள் வென்ற ஆறு வீர வீராங்கனைகள் கோப்ரல் நிலை பதவிக்கு உயர்த்தப்பட்டனர். மேலும் அவர்களின் பயிற்றுவிப்பாளர்களுக்கும் பணப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது
