பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 25,000 ரூபாய் உதவி

நவம்பர் ஏழாந்திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.

உயர்தர பரீட்சையை முன்னிட்டு எதிர்வரும் 7ஆம் திகதியுடன் நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

அதற்கமைய டிசம்பர் 8ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மீள ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை (G.C.E A/L Exam) முன்னிட்டு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் பரீட்சைகள் டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது

இந்நிலையில் டிசம்பர் 8 ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மீள ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து 2026 ஜனவரி முதலாம் திகதி புதிய கல்வியாண்டுக்காக பாடசாலைகள் ஆரம்பமாகும்