கிரிபோருவ இறப்பர் தொழிற்சாலை வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் பலி

எட்டியந்தோட்டை கிரிபோருவ இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். 

எட்டியந்தோட்டை – கிருபொருவ தோட்டத்தில் இயங்கும் தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. 

சம்பவத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ருவான்வெல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.