காய்கறித் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த தொழிலாளி கைது செய்யப்பட்ட சம்பவம் மஸ்கெலியாவில் இடம்பெற்றுள்ளது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள் படம: செ. தி. பெருமாள்

காய்கறித் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த தொழிலாளி கைது செய்யப்பட்ட சம்பவம் மஸ்கெலியாவில் இடம்பெற்றுள்ளது.

இரண்டு கஞ்சா செடிகளுடன் புரவுன்சீக் தோட்ட எமலீனா பிரிவில் உள்ள தொழிலாளி கைது.செய்யப்பட்டுள்ளார்.

மஸ்கெலியா புரவுன்சீக் தேயிலைத் தோட்டத்தின் எமிலினினா பிரிவில் உள்ள ஒரு காய்கறித் தோட்டத்தில் சட்டவிரோதமாக இரண்டு கஞ்சா செடிகளை பயிரிட்டதாக சந்தேகத்தின் பேரில் மஸ்கெலியா காவல்துறை அதிகாரிகள் குழு இன்று (01) ஒரு தோட்டத் தொழிலாளியைக் கைது செய்தது.

மஸ்கெலியா காவல் நிலையத் பொறுப்பதிகாரி ஸ.எஸ.புஷ்பகுமாரவுக்குக் கிடைத்த தகவலின் பேரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சந்தேக நபரும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா செடிகளும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்த பட்ட வேளையில் சந்தேக நபரை ஐந்து லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்து எதிர் வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆஜர் ஆகும் படி நீதவான் பணித்துள்ளார்.

மஸ்கெலியா நிருபர்செ. தி. பெருமாள்