67 வது அரச ஓசுசலக் கிளை மட்டக்களப்பில் இன்றுதிறந்து வைப்பு

புதிய அரசாங்கத்தினால் கிழக்கு மாகாண மக்களுக்கு நியாயமான விலையில் தரமான மருந்துகளை வழங்கும் உன்னத நோக்குடன் கடந்த காலத்தில் கிழக்கு மாகாண மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரு முகமாகவும் இந்த மருந்தக கிளை மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த அரச மருந்தக கிளை திறப்பு விழா நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர கலந்து கொண்டு இதனை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைத்தார்.

இலங்கை மருந்தக கூட்டு தாவன தலைவர் C. விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்த திறப்பு விழா நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் A.J அருள்ராஜ் அரசாங்க மருந்தக கூட்டுத் ஸ்தாபன உயர் அதிகாரிகள் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் மட்டக்களப்பு மாநகர சபை தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் இந்த திறப்பு விழா நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்

இதுவரை காலமும் மாவட்ட மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியமான மருந்துகளை தூர இடங்களுக்கும் அதிக விலைக்கும் கொடுத்து வாங்கி வந்தனர்

புதிய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக இந்த புதிய கிளை நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வரதன்