இன்று மழைக்கு வாய்ப்பு இல்லை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (31) சீரான வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பை வௌியிட்டு அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இன்று அதிகாலை மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பனிமூட்டம் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.