போதைப்பொருள் வர்த்தகர்கள் சகலரும் உடனடியாக சரணடைய வேண்டும்

போதைப்பொருள் வர்த்தகர்கள் சகலரும் உடனடியாக சரணடைய வேண்டும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் யார் யார் என்பது தெரியும் என்பதால் அனைவரும் ஓடி ஔிய முயற்சிக்காமல் சரணடைய வேண்டும் என்று ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.

போதைப் பொருள் ஒழிப்புக்கான தேசிய வேலைத் திட்டத்தை இன்று (30) அங்குரார்ப்பணம் செய்து வைத்து ஜனாதிபதி உரையாற்றினார்.

சமூக ஸ்திரத்தன்மைக்காக போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தோற்கடிக்க வேண்டும் என்றும், அதற்காகத் தானும் அரசாங்கமும் எடுத்துள்ள நடவடிக்கைகள் நிச்சயமாக வெற்றி பெறும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். 

விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் புதிய திட்டமான ‘நாடே ஒன்றுபட்டு’ தேசிய நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி :. 

ஒரு குழந்தை பிறக்கும்போது, தாய்க்கும் தந்தைக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தங்கள் கண் முன்னே தங்கள் குழந்தை அழிந்து போவதைப் பார்க்கிறார்கள். தாய் மிகுந்த வேதனைக்குள்ளாகி, சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்படுகிறார். 

போதைப்பொருள் நாட்டைச் சூழ்ந்துள்ள ஒரு மாயாஜாலப் பேரழிவு என்றும், அதைத் தோற்கடிக்கத் தாம் நடவடிக்கை எடுப்பதாகவும், குழந்தைகள், பொதுச் சமூகம் மற்றும் ஒரு தேசம் என்ற வகையில் முழு நாடும் இந்தப் பேரழிவின் இரையாகி வருவதாகவும் ஜனாதிபதி கூறினார். 

இளம் தலைமுறையினர் போதைப்பொருள் அச்சுறுத்தலின் மிகப்பெரிய இரையாகிவிட்டனர் என்றும், இந்த மாயாஜாலச் சூறாவளி கிராமங்கள் மற்றும் நகரங்களில் இப்போது பரவி வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

ஒரு குழந்தை பிறக்கும்போது, தாய்க்கும் தந்தைக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தங்கள் கண் முன்னே தங்கள் குழந்தை அழிந்து போவதைப் பார்க்கிறார்கள். தாய் மிகுந்த வேதனைக்குள்ளாகி, சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்படுகிறார். 

நாம் 800 – 900 கிலோ போதைப்பொருளைப் பறிமுதல் செய்கிறோம். நாம் வந்த அனைத்தையும் கைப்பற்றவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்தையும் கைப்பற்றினால், அது இங்கே வராது.

இதனால், அவர்கள் அறிந்திருக்கிறார்கள், கைப்பற்றப்பட்ட அளவு வந்த அளவில் ஒரு சிறு பகுதிதான் என்று. ஆனால், கைது செய்யப்பட்ட அளவைப் பார்த்தால், விநியோகிக்கப்படும் அளவு எவ்வளவு பெரியது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். 

800 கிலோ போதைப்பொருள் ரூபா 1,500 கோடிக்கு விற்கப்படுகிறது. இதனால், இந்த வர்த்தகத்தின் மூலம் பெரிய அளவில் பணம் குவிக்கப்பட்டுள்ளது. இது ஒரே நேரத்தில் பெரும் கறுப்புச் சாம்ராஜ்யங்களை உருவாக்கும் கடத்தலாக மாறியுள்ளது.

அவர்களுக்குள் இந்தச் சந்தையைப் பங்கிட்டுக் கொள்ள மோதல்கள் உருவாகியுள்ளன. அண்மைக் காலத்தில் நடந்த துப்பாக்கிச் சூடுகள் அனைத்தும் குழுக்களுக்கு இடையே நடந்த சம்பவங்கள். ஆங்காங்கே துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன.

இவை அனைத்தும் போதைப்பொருளுடன் தொடர்புடையவை. எப்படி இவ்வளவு துப்பாக்கிகள், வெடிமருந்துகள், பாதுகாப்பு வசதிகள் உருவாகின? ஒரு நாட்டின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட அரச கட்டமைப்பு உள்ளது.

ஆனால், உண்மையில் நடந்தது என்னவென்றால், அவர்களின் நிதி பலத்தால் அரச கட்டமைப்பு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனால், இனியும் இந்த நிலையை மறைத்துக்கொண்டு எதிர்கொள்ள முடியாது. 

அவர்கள் கையில் துப்பாக்கிகள் உலவுகின்றன. அவர்கள் துப்பாக்கி தயாரிப்பாளர்கள் அல்ல. உரிமம் பெற்ற ஆயுதங்களைப் பெற அதிகாரம் இருப்பது அரசுக்குத்தான். அரசுக்கு சொந்தமான

துப்பாக்கிகள் அவர்கள் கைக்கு எப்படிச் சென்றன? சில இராணுவ முகாம்களில் இருந்து 73 T56 துப்பாக்கிகள் அவர்கள் கைக்குச் சென்றதாகத் தற்போது தகவல் வந்துள்ளது.

அதில் 35 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 38 அவர்கள் கைகளில் உள்ளன. அவை அரசுக்கு சொந்தமான ஆயுதங்கள். அதேபோல், அதற்கான குண்டுகளையும் நாங்கள் கைப்பற்றினோம்.

இராணுவத்தின் முக்கிய கேர்னல் ஒருவர் குண்டுகளை வழங்கியுள்ளார். அதற்குப் பதிலாக வங்கியில் பணம் வந்துள்ளது. அரசுக்கு சொந்தமான துப்பாக்கியை ஒரு பொலிஸ் அதிகாரி விற்றுவிட்டுத் தப்பிச் செல்கிறார்.

துப்பாக்கிகள் விற்கப்படுகின்றன. ஏன் ஆயுதக் குழுக்களின் பணபலம் நமது அரச கட்டமைப்பை விழுங்க முடிந்தது?” 

பொலிஸ், இராணுவம் இந்த போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கப் பெரும் பங்காற்றினாலும், ஒரு சிலரின் நடவடிக்கைகள் காரணமாக கருப்பு அரசாங்கம் ஒன்று உருவாகி வருகிறது. 

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் சில அதிகாரிகள் பாதாள உலகத் தலைவர்களுக்குப் கடவுச்சீட்டுக்களைத் தயாரித்துக் கொடுத்துள்ளதாகவும், இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக அரசாங்கம் அழிந்து போயுள்ளது.

ஆகவே, போதைப்பொருள் வர்த்தகர்கள் சகலரும் உடனடியாக சரணடைய வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.