அமைச்சர் ஆனந்த விஜேபால பூநகரி பிள்ளையார் ஆலயத்திற்கு விஜயம்

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால பூநகரி பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு பூநகரி மடத்தடி பிள்ளையார் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். 

இதன்போது, அமைச்சர் அங்குள்ள மக்களோடு கலந்துரையாடினார். 

அமைச்சருடன் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ம. மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.