மஸ்கெலியா பிரதேச மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய சந்தேகத்தில் கைதான நபருக்கு எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்க மறியல் வழங்கப்பட்டுள்ளது.
மஸ்கெலிய டீசைட் தோட்டத்தைச் சேர்ந்த 23 வயது நிரம்பிய அக்குல்ராஜ் ஹரிசன் என்பவருக்கே அட்டன் நீதவான் பீற்றர் போல் விளக்க மறியல் உத்தரவு பிறப்பித்தார்.
மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஸ்பகுமாரவின் பணிப்புக்கு அமைய நேற்று மாலை (24) ஹரிசன் கைதுசெய்யப்பட்டார்.
அவர் இன்று (25) அட்டன் நீதவான் நீதிமன்ற நீதிபதி பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார் என்று பொலிஸ் சார்ஜன்ற் பேரின்பநாயகம் மதிமுரசுவுக்குத் தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
