கொலைச் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் கைபேசியில் இருப்பது தான் அல்லவென்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
செவ்வந்தி தனது தொலைபேசியில் பதிவு செய்திருப்பது எந்த நாமலுடைய இலக்கம் என்பதை பரிசோதித்தவர்களே கூற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இதனைத் துள்ள நாமல் ராஜபக்ஷ, மேலும் குறிப்பிடுகையில்,
மஹிந்த ஜயசிங்கவுக்கு கனவிலும் ராஜபக்ஷர்கள் தான் தோன்றுகின்றனர். அதனால் அதனால் தான் அவர் அதிகளவில் ராஜபக்ஷர்கள் குறித்து பேசுகின்றார்.
அரசாங்கத்திலும் நாமல் கருணாரத்ன என்ற ஒருவர் இருக்கின்றார். நாமல் எனக் கூறும் போது தமது அரசாங்கத்திலுள்ள நாமலை மறந்து அவர்களுக்கு எனது நினைவு வருகின்றமை மகிழ்ச்சிக்குரியது.
செவ்வந்தி தனது தொலைபேசியில் பதிவு செய்திருப்பது எந்த நாமலுடைய இலக்கம் என்பதை அதனை பரிசோதித்தவர்களே கூற வேண்டும் என்றார்.
