பலத்த காற்று, கனமழை மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி, வங்காள விரிகுடா கடற்பகுதியில் பயணிக்கும் பலநாள் மீன்பிடி படகுகள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இன்று (24) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வழியாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாலுள்ள ஆழமற்ற கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இன்று (24) காலை 5:30 மணியளவில், தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் குறைந்த அழுத்தப் பகுதி உருவாகியுள்ளது.
