மத்திய மாகாண நவராத்திரி போட்டிகள் ஒத்திவைப்பு

2025.10.25 ஆம் திகதி சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மத்திய மாகாண நவராத்திரி போட்டிகள் திகதி மாற்றப்பட்டு 2025.10.26 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் என மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் பெ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

எதிர்வரும் 2025.10.25 ஆம் திகதி சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மத்திய மாகாண நவராத்திரி போட்டிகள் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 21.10.2025 ஆம் திகதி மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டு பதில் பாடசாலை 25 ஆம் திகதி நடத்தப்படவுள்ளமையால் அன்றைய தினம் நடைபெறவிருந்த மேற்படி நவராத்திரி விழா போட்டிகள்
அதற்கடுத்த நாளான 2025.10.26 ஆம் திகதி நடைபெறுமென
மாகாண கல்வித் திணைக்களத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் பெ. விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

பன்விலை நிருபர் ம. நவநீதன் ‪
………..