வெலிகம பிரதேச சபைத் தலைவர் கடமை நேரத்தில் சுட்டுக்கொலை!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் கடமை நேரத்தில் சபைக்குள்ளேயே சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

சபைத் தலைவரின் இருக்கையில் அவர் அமர்ந்திருந்த சமயம் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.

இன்று காலை 10.30 அளவில் அவரிடம் ஆவணமொன்றில் கையொப்பம் பெற வேண்டும் என்று கூறி பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகரவின் அருகில் சென்ற இருவர் அவரைச் சுட்டுவிட்டுத் தப்பிச்சென்றுவிட்டனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பிரதேச சபைத் தலைவர் உடனடியாக மாத்தறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதிலும் அவர் உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருப்பதாகப் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.